நல்ல டேடக்டிவ் சினிமாவை பார்த்து ரொம்ப நாட்களாகி விட்டது. தமிழில் ஒரு சில படங்களே, நான் சிகப்பு மனிதன் பாக்யராஜ், வேட்டையாடு விளையாடு போல கொஞ்சமே நான் பார்த்திருக்கிறேன் என்பதால் இந்த படம் என்னை ரோமக கவர்ந்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் பிராட் பிட் வேறு நடித்திருப்பதால் என்னை பார்க்க தூண்டியது.
கதையை நான் நிறைய சொன்னால் படம் பார்க்கும் ஆவல் போய்விடும் என்பதால் சுருக்கமாக சொல்ல முயற்சிக்கிறேன். குற்றங்கள் நிறைந்த அமெரிக்க நகரத்தில் கொடூரமான ஒரு கொலை நடக்கிறது, அதை தொடர்ந்து இன்னொன்று என இரண்டு கொலைகள். இந்த கொலைகளை கண்டுபிடிக்கும் பொறுப்பை ஏற்கின்றனர் சொமேர்செட் (Morgan FreeMan) மற்றும் டேவிட் (Brad pitt) என்ற இரண்டு டேடேக்டிவ்களும். சொமேர்செட் இன்னும் ஒரு வாரத்தில் பணியில் இருந்து ஓய்வு பெறப்போகிறவர், டேவிட் இப்போதுதான் அந்த நகரத்தில் தன பணியை ஆரம்பிக்கிறார்.
சொமேர்செட் தன் அனுபவத்தில் அந்த சைக்கோ கொலைக்காரன் பைபிளில் குறிப்பிட்டு இருப்பது போல ஏழு பாவங்களை போல ஏழு கொலைகள் செய்யப்போகிறான் என்று யூகிக்கிறார். அந்த ஏழு கொலைகளையும் அந்த கொலைகாரன் செய்தானா இல்லையா?? அவனை இருவரும் சேர்ந்து கண்டுபிடித்தனரா?? என்பதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
சொமேர்செட் தன் அனுபவத்தில் அந்த சைக்கோ கொலைக்காரன் பைபிளில் குறிப்பிட்டு இருப்பது போல ஏழு பாவங்களை போல ஏழு கொலைகள் செய்யப்போகிறான் என்று யூகிக்கிறார். அந்த ஏழு கொலைகளையும் அந்த கொலைகாரன் செய்தானா இல்லையா?? அவனை இருவரும் சேர்ந்து கண்டுபிடித்தனரா?? என்பதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
பிராட் பிட்டும், மோர்கன் ப்ரீமனும் வித்தியாசமான கூட்டணி. பிராட் பிட் அசுர வேகம் என்றால், மோர்கன் விவேகமும் பொறுமையாகவும் ஒவ்வொரு விசயங்களையும் கையாள்கிறார். இவர்களின் பாத்திர படைப்பு மிகவும் சுவாரசியமானது. ஒரு வாரத்தில் ஓய்வு பெறப்போகும் தான் எதற்கு இந்த கேசில் முயற்சிக்க வேண்டும் என்று நினைக்கிறார் மோர்கன்.
என்னை ரொம்பவும் கவர்ந்தது மோர்கன் பிரீமனின் நடிப்பே. அலட்டிகொள்ளாத அதே சமயம் பொறுமையும், புத்திசாலித்தனமாகவும் முடிவெடுக்கும் பாங்கு என படம் முழுவதும் அட்டகாசப்படுத்தி இருக்கிறார் மோர்கன்.
பிராட் பிட்டிக்கு இந்த மாதிரி வேடம் நன்றாகவே பொருந்துகிறது. ஐந்து வார்த்தை வசனங்களில் மூன்று வார்த்தை அமெரிக்கர்களின் பிரபலமான கெட்ட வார்த்தைதான் வருகிறது (கொஞ்சம் சகிக்கல) . கதாநாயகி வய்நெத் பல்ட்ரா (Gwyneth Paltrow) பார்க்க அழகிதான் (ஹி ஹி.. ஹி..). ஆனாலும் நடிக்க வாய்ப்புகள் குறைவே. இவர்கள் வசிக்கும் அபார்ட் மேண்டின் கீழ் ஓடும் மெட்ரோ ரயிலினால் அந்த அபார்ட் மென்டே அதிரும் போது சிரிக்கும் குவ்ய்நேதை பார்த்துக்கொண்டே இருக்கலாம். நல்ல த்ரில்லர் படம் பார்க்கும் ஆர்வம் உள்ளவர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய படம் இது.
படம் 1995- இல் வெளிவந்து $327 அமெரிக்க டாலர்களை அள்ளி குவித்தது (தகவல் உபயம்-விக்கிபீடியா). படத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், இரண்டு மணி நேரமும் விறுவிறுப்பு குறையாமல் கதையை நகர்த்தி இருப்பதுதான். தவறாமல் பார்க்கவேண்டிய படம். படத்தின் ட்ரைலர் கிழே !!
அடுத்து ஒரு நல்ல படத்தின் விமர்சனத்தோடு உங்களை சந்திக்கிறேன்

















