Monday, December 12, 2011

Garden State/கார்டன் ஸ்டேட்/ ஹாலிவூட் சினிமா/விமர்சனம்

இந்த ப்ளாக்கை ஆரம்பித்து நான்கு மாதங்கள் ஆகியும் என்ன எழுவது என்று பலவாறு குழம்பிக்கொண்டு இருந்தேன், எல்லோரும் தன் பங்குக்கு உலகப்படங்களை எழுதி கலைத்தொண்டு ஆற்றும்போது நாம மட்டும் என்ன குறைவா என்ன?? நம்ம பங்குக்கு நம்மளை அசத்திய படங்களை எழுதுவோமேன்னு பேனாவை... ச்சே ச்சே பொட்டிய தட்ட ஆரம்பிச்சுட்டேன். 

"காதல்" இந்த உலகத்திலே எல்லோருக்கும் பொதுவானது, நம்ம ஊரு குப்புசாமிக்கும் வெள்ளைக்கார ஆண்டனிக்கும் காதல் ஒண்ணுதான். இரண்டாம் உலகப்போர் வர காரணமா இருந்த ஜெர்மன் முன்னாள்  அதிபர்  ஹிட்லருக்கே காதல்  பொத்துகிட்டு வந்துடுச்சி ஈவா பிரவுன் மேல. அதனால முதல் பதிவு நல்ல காதல் படமாவே எழுதுவோமேன்னு முடிவு பண்ணி, நம்ம இங்கிலீஷ் தொரைங்க எல்லாம் காதலனும் காதலியும் படத்தோட முடிவுல இணைஞ்சிட்ட அதுக்கு பேரு ரொமாண்டிக் காமெடியன்னு பேரு வச்சிருக்காங்க. அப்படி ஒரு படம்தான் "கார்டன் ஸ்டேட்"  (Garden State).

 கதை என்னன்னா, ஒரு மாதிரியா எழுதறேன் கொஞ்சம் புரியுதான்னு பாருங்க, லார்ஜ் மேன் காலைல ஒரு கேட்ட கனவு கண்றார் என்னன்னா ஒரு விமானத்துல போகும்போது அது விபத்து நடக்கிற மாதிரி காலைல எழுந்த உடனே அவங்க அப்பா போன் பண்ணி அம்மா செத்து  போய்ட்டாங்க கெளம்பி வான்னு  சொல்றாரு. ஏதோ மூணாம் மனுஷன் மாதிரி அந்த கருமாதில கலந்துகிட்ட அப்புறம் சாவுக்கு குழிதோன்ற பிரண்ட்ஸ் கூட பொய் குஜால் பண்றாரு. ஒரு சந்தற்பத்துல நம்ம கதாநாயகியை சாமை (Natalie Portman) சந்திக்கிறாரு, அப்புறம் கண்டதும் காதல் எல்லாம் முடிஞ்சா அப்புறம் கெளம்பி மறுபடியும் லாஸ் ஏஞ்செல்ஸ்க்கே மறுபடியும் போகணும்னு  முடிவு பண்ணி ஏர்போர்ட் வரைக்கும் போற லார்ஜ் மேன் கடைசியா என்ன முடிவெடுத்தார் அப்படிங்கறதுதான் கதை. இதற்கு நடுவில் லார்ஜ் மேன் அம்மா ஏன் இறந்தாங்க, லார்ஜ் மேன் ஏன் லாஸ் ஏஞ்செல்ஸ் போனார் அப்படிங்கறத நீங்களே பாருங்க !!! ம் ....வெண் திரையிலையோ இல்ல டவுன்லோட் பண்ணியோ பாருங்க !!


"ஜாச் ப்ராப்" கதை எழுதி, இயக்கி அவரே ஹீரோவா நடிச்சிருந்தார். ஹாலிவூட்ல கூட நம்ம ஊரு சேரன், பார்த்திபன் அமீர் மாதிரி இருப்பாங்க போல. மேலோட்டமா பார்த்தா கதை ஒண்ணுமே இல்ல ஆனா திரைக்கதையில் குட்டி குட்டி கவிதையா எடுத்திருப்பார் ஜாச் ப்ராப். நூறு நிமிஷம் படம் போறதே தெரியாம அவ்ளோ எதார்த்தமா இருக்கும் காட்சிகள்.

படத்தில சுவராசியமானா இன்னொரு விஷயம் "நடாலி போர்ட்மன்" ஒரு மாதிரி பப்ளியான கதாபாத்திரம், பின்னி பெடல் எடுத்திருக்கு பொண்ணு. சின்ன சின்ன பொய் சொல்றதாகட்டும், தன்  வீட்டின் பின்புறத்தில் செத்து
போன தன் செல்ல பிராணிகளான நாய், பூனைக்கு சமாதி கட்டி வைக்கிறது, ஜாச் ப்ராப் கண்ணீர் விட்டு அழற போது ஒரு சின்ன கப் எடுத்து அவன் கண்ணீரை பிடிக்கிறதுன்னு இப்படி படம் முழுக்க துரு துரு ராட்சசி. கிழே இருக்கிற ஒரு விடியோவ பாருங்க உங்களுக்கே தெரியும். 



 அப்புறம் ஜாச் ப்ராப், மனுஷன் அப்பாவி மாதிரி ஒரு கதா பாத்திரம்  அற்புதமா  பொருந்தி நடிச்சிருப்பார். தன் பழைய மோட்டார் சைக்கிள் எடுத்துகிட்டு நடாலிய உட்கார வச்சுக்கிட்டு போறத பார்த்து நமக்கே அப்படி போகணும் போல இருக்கும், நடாலி அண்ணனை பார்த்துட்டு நிஜமவே இவர் உனக்கு அண்ணானா அப்படின்னு கேட்கறது, அவங்க அப்பகிட்ட மனசு உருக வைக்கிற மாதிரி நடிச்சிருக்கார்.

படத்தோட இசையை பத்தி சொல்லியே ஆகணும், இசை "அலெக்ஸ் முர்டோச்", பின்னணி இசை அவ்ளோ அற்புதமா இருக்கும், முக்கியமா இசைக்காக இந்த படம் "கிராம்மி" அவார்டும் "கோல்டன் ட்ரைலர்" அவார்டும் வாங்கியது சிறப்பு. படத்தோட ஒரு ட்ராக்கை மட்டும் இணைச்சிருக்கேன் மீதிய கேட்கனும்னா நம்ம youtube போய்ட்டு "Garden State sound track" தட்டுங்க.



படத்தோட ட்ரைலர் பாருங்க அதுவே பாதி கதையை சொல்லிடும். இன்னும் நெறைய இந்த படத்தை பற்றி எழுதணும்னு  நெனைக்கிறேன் ஆனா நீங்க படம் பார்க்கும்போது அந்த சுவாரசியம் குறைஞ்சிட கூடாதேன்னு இத்தோட முடிச்சிக்கறேன்.படம் பார்த்துட்டு அப்புறமா கமென்ட் போடுங்க!!!



  
===============================================
அடுத்த படத்தோட விமர்சனத்துல சந்திப்போம்.

No comments:

Post a Comment