Monday, March 26, 2012

ஹாலிவூட் சினிமா விமர்சனம்/Forgetting Sarah Marshall/18+ மட்டும்

ரொமாண்டிக் காமெடி வகையறா படங்கள் எடுப்பதில் நம்ம ஆட்களை மிஞ்ச ஆள் இல்லை என்றாலும், இவர்கள் பாணியே வேறு. காதல் அதனால் வரும் பிரச்சினை இறுதியில் இணைவார்கள் நடுவில் நடக்கும் விசயங்களில் கொஞ்சம் பப்பி சேம் கலந்து கட்டி சொல்வார்கள். "பர்கேட்டிங் சாரா மார்ஷல்" (Forgetting Sarah Marshall) படமும் ரொமாண்டிக் காமெடி வகையை சார்ந்ததே.

காதலியை விட மனமில்லாமல் வாதாடும் பீட்டர்
2008-இல், "நிக்கோலஸ் ஸ்டோளர்" இயக்கத்தில், Universal Studio வெளியீட்டில் வந்த படம். " காமெடி பெஸ்டிவலில் இந்த படம் 2008-இல் வெளிவந்த சிறந்த காமெடி படமாக தேர்வு செய்யப்பட்டது.

சாரா தன் புது காதலனுடன்
கதையை சுருக்கமாக சொல்ல முயற்சிக்கிறேன். பீட்டர் ஒரு மியூசிக் கம்போசர். அவன் காதலி சாரா மார்ஷல், அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியான "Crime Scene: The Scene of the Crime" -இன் கதாநாயகி, அதே நிகழ்ச்சியின் பின்னணி இசைகோர்ப்பு பணிகளை செய்பவன் பீட்டர். ஒரு நாள் திடீரென பீட்டரிடம் இருந்து பிரிந்து செல்வதாக சொல்கிறாள் சாரா. மனமுடையும் பீட்டர், அமைதி தேடி ஹவாய் செல்கிறான்.

இவன் தங்க போகும் அதே ஹோட்டல் ஒன்றில் சாரா மற்றும் அவளுடைய புதிய காதலன் (Russel Brand) இருக்கும்போது சந்திக்கிறான். காதலியை மறக்கமுடியாமல் தவிக்கும் பீட்டருக்கு அந்த ஹோட்டலில் பணிபுரியும் ரசேல் (Mila Kunis) உடன் காதல் வருகிறது. ஆனால் சாராவும் அவள் புதிய காதலனுக்கும் இடையில் பிரச்னை எழுந்து பீட்டரை மறுபடியும் இணைந்து வாழ அழைக்கிறாள் சாரா. புதிய காதலிக்கும் பழைய காதலிக்கும் இடையில் சிக்கிய பீட்டர் என்ன முடிவு செய்தான் என்பதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!!.


ஒரு படம் நம்மை சிரிக்கவைக்கவும், அழ வைக்கவும், நெகிழ வைக்கவும் வேண்டும், அப்படி ஒரு படம் தான் இது. படத்தில் முக்கிய அம்சமே காஸ்டிங் தான். இவர்களை சரியான இடத்தில் பொருத்தி இருப்பதே படத்தின் பெரும் பலம். காதல் தோல்வி அடைந்தவர்கள் நம்ம ஊரில் மட்டுமல்ல இங்கேயும் அப்படித்தான் போல.


சரி போகட்டும், ஜாசன் செகல் பத்தி கொஞ்சம் பேசலாம்... இவரே எழுதி பீட்டர் கதாபாத்திரத்திலும் நடிச்சிருக்கார் , உண்மையை சொல்லனும்னா அதுக்கு justify  பண்ணி இருக்கார். இவர் முகம் காதல் தோல்வியின் மென் சோகத்துக்கு நல்லாவே செட் ஆகுது. முதல் சீன்ல இருந்து மனுஷன் நம்மளை சிரிக்க வைக்க ஆரம்பிச்சுடறார்.காதலி விட்டுட்டு போனதும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அழறதும், அவளை மறக்க அவளுக்கு புடிச்ச இடமான ஹவாயக்கே போறதும்னு, இன்னும் நெறைய இருக்கு இவர பத்தி சொல்றதுக்கு.அடிக்கடிபிறந்த மேனிக்கு நிக்கறதுதான் கொஞ்சம் எரிச்சலா இருக்கு.

மிலா குனிஸ் பத்தி ரெண்டு வார்த்தை சொல்லாம இந்த பதிவை முடிக்க மனமில்லை. ரஷ்யன் பொண்ணு, குரல் கொஞ்ச கர கரன்னு இருக்கு , கண்ணு கொஞ்சம் பெரிசு. மத்த இத்யாதிகள் எல்லாம் நீங்களே பார்த்துகிடுங்க.  படத்தின் ட்ரைலர் கிழே!!!


2 comments:

  1. என்னைப் பொறுத்தவரை படம் ஜஸ்ட் ஒருமுறை பார்க்கலாம் டைப் தான். விமர்சனம் நன்றாக இருக்கிறது.

    அப்படியே Tamilmanam, Indli போன்ற திரட்டிகளில் இணைத்தால் வருபவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாகுமே? அந்தந்த தளங்களிற்கு சென்று ஓட்டுப்பட்டையை எவ்வாறு சேர்ப்பது எனப் பாருங்க.

    ReplyDelete
  2. Word Verification ஐ எடுத்துவிடுங்களேன் ப்ளீஸ் ...

    ReplyDelete