Friday, March 2, 2012

The Proposal/தி ப்ரோபோசல்/ஹாலிவூட் சினிமா விமர்சனம்

ஒரு செய்தியை அறிவிக்க உங்கள் பெண் பாஸ்சின் அறைக்கு போகிறீர்கள், அங்கே உங்களை உள்ளே வர வைத்து இவரைத்தான் நான் கல்யாணம் செய்துகொள்ளப்போவதாக உங்கள் பாஸ் கம்பனி டைரெக்டர்களிடம் உங்களை அறிமுகப்படுத்தினால் எப்படி இருக்கும். இந்த ஒரு லைனை மட்டும் வைத்துக்கொண்டு வெளிவந்த ஒரு அருமையான ரொமாண்டிக் காமெடி வகையான படம்தான் "தி ப்ரோபோசல்" (The Proposal).

Sandra Bullock தயாரிப்பில், Pete Chirelli எழுதிய கதையை இயக்கியவர் Anne Fletcher. ஒரு பாதி கதை நியூயோர்க்கிலும் மற்றொரு பாதி அலாஸ்காவிலும் கதை நகர்கிறது. ஹாலிவூடில் வெளிவந்த நல்ல ரொமாண்டிக் காமெடி  வகை படங்களில் இதுவும் ஒன்று.

கதைக்கு வருவோம், மார்கரெட் (Sandra Bullock) ஒரு பதிப்பகத்தில் முதன்மை எடிட்டர், இவர் கனடா நாட்டு பிரஜை இவருடைய விசா காலம் முடிந்து வெளியேற்றப்பட இருக்கும் நிலையில் தன்னிடம் உதவியாளராக இருக்கும் ஆண்ட்ருவை திருமணம் செய்யப்போவதாக கூற ஆண்ட்ருவுக்கு அதிர்ச்சி. தன்னை திருமணம் செய்தால் ஆண்ட்ருவை எடிட்டராக பணி உயர்த்த ஒத்துக்கொள்கிறார் மார்கரெட்.

immigrant ஆசாமிகளை  ஏமாற்ற ஆண்ட்ருவுடன் அவனுடைய சொந்த ஊரான அலாஸ்காவுக்கு    அவனுடன் செல்லும்  மார்கரெட், ஆண்ட்ருவின் குடும்பத்தின் வற்புறுத்தலின்பேரில் அங்கேயே திருமணம் செய்ய உத்தேசிக்கும் ஆண்ட்ருவின் குடும்பத்தாரின் அன்பில் மயங்கி உண்மையை ஒத்துக்கொண்டு கனடா கிளம்ப ஆயத்தமாகிறார் மார்கரெட். முடிவு என்ன என்பதை நீகளே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

படத்தின் பெரிய பலமே சண்ட்ராதான், ஆபீசில் எல்லோருக்கும் சிம்ம சொப்பனம், ஆனால் இந்த பிரச்சினை இருப்பதால் கொஞ்சம் அடக்கி வசிக்க வேண்டிய நிலை. அலாஸ்காவில் இவர் படும் பாடு சிரிப்பு பட்டாசு.  தன் செல் போனை தூக்கி போகும் பருந்திடம் இருந்து அதை காப்பாற்ற நாய் குட்டியை தூக்கிக்கொண்டு நாயை எடுத்துக்கொண்டு செல் போனை தருமாறு ஒடுவதாகட்டும், கல்யாணத்தை அறிவிக்கும் போது எல்லோரும் முதமிடுக்கொள்ள கேட்க்க வேண்டா வெறுப்பாக முத்தம் கொடுப்பதாகட்டும், ஆண்ட்ருவின் பாட்டியுடன் சேர்ந்து ராப் பாட்டுக்கு நடனம் ஆடுவதாகட்டும் அங்கங்கே வெடி சிரிப்பு வரும்.

ஆண்ட்ருவாக ரேயான் ரெய்னோல்ட்ஸ் (Ryan Reynolds),  ஆரம்ப காட்சியிலேயே பாசுக்கு அடங்கிய பணியாளராக அவருக்கு காப்பி வாங்கிக்கொண்டு வருவதாகட்டும், சண்ட்ராவை மண்டியிட்டு தன்னை திருமணம் செய்துகொள்ள கேட்க வைப்பதிலும் நன்றாகவே நடித்திருந்தார்.






மொத்தத்தில் நேரத்தை வீணாக்காமல் நல்ல படம் பார்க்கவேண்டும் என நினைப்பவர்களுக்கு இது உகந்த படம்.


அடுத்து ஒரு நல்ல படத்தின் விமர்சனத்துடன் உங்களை சந்திக்கிறேன்.  

4 comments:

  1. அபாரமான படம் எனக் கூற முடியாவிட்டாலும் நல்ல டைம் பாஸுக்கு சிரித்து பார்க்கக் கூடிய படம்.

    நல்ல விமர்சனம்.

    ReplyDelete
  2. நான் ஆங்கில படம் ஒன்றை பார்த்து நன்கு சிரித்தது ரொம்பவும் குறைவு.அதில் இதுவும் ஒன்று.நல்ல காமெடி டிராமா.சில காட்சிகளை மறக்க முடியாது.

    உங்க விமர்சனத்துக்கு என்னா ? நல்ல விமர்சனம்.இப்படியே தொடருங்கள்.மிக்க நன்றி.

    ReplyDelete
  3. ஹாலிவுட்ரசிகன்Mar 3, 2012 10:00 PM

    அபாரமான படம் எனக் கூற முடியாவிட்டாலும் நல்ல டைம் பாஸுக்கு சிரித்து பார்க்கக் கூடிய படம்.

    நல்ல விமர்சனம்.//

    உங்கள் வருகைக்கு நன்றி. உண்மையில் கவலையை மறந்து சிரிக்க வைக்கும் இந்த படம் என்பது உறுதி

    ReplyDelete
  4. KumaranApr 8, 2012 06:10 AM

    நான் ஆங்கில படம் ஒன்றை பார்த்து நன்கு சிரித்தது ரொம்பவும் குறைவு.அதில் இதுவும் ஒன்று.நல்ல காமெடி டிராமா.சில காட்சிகளை மறக்க முடியாது.

    உங்க விமர்சனத்துக்கு என்னா ? நல்ல விமர்சனம்.இப்படியே தொடருங்கள்.மிக்க நன்றி./

    உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

    ReplyDelete