த்ரில்லர் சினிமாக்களில் எனக்கு அலாதி பற்று உண்டு. ஒரு படம் முடிவு டைட்டில் கார்டு போடும் வரை நம்மை கட்டி போட்டு வைத்திருக்க வேண்டும். ஒரு நிமிடம் நாம் படத்தை தவற விட்டாலும் எங்கே கதை விளங்காமல் போய்விடுமோ என்று தவிக்க வைக்க வேண்டும். என் நண்பர் ஒருவரின் பரிந்துரையின் படி இந்த படத்தை பார்க்க நேர்ந்தது. நல்லவேளை என் நண்பர் கதையை எவ்வளவோ வற்புரித்தியும் சொல்ல மறுத்துவிட்டார். நீயே பார்த்து தெரிந்துகொள் என்று சொல்லிவிட்டதனால் இந்த படத்தை பார்க்கும்படி நேர்ந்தது.
2010-இல் "மார்டின் சகோர்செசே" (Martin Scorsese) இயக்கத்தில், "The Shutter Island" என்ற பெயரில் "டென்னிஸ் லேஹனே" (Dennis Lehane) எழுதிய நாவலை மயமாக கொண்டு டைட்டானிக் படத்தின் புகழ் பெற்ற ஹீரோ லியோ டி காப்ரியோ (Leonardo Dicaprio) நடிப்பில் வெளிவந்த படம்.
படத்தின் கதையை நான் விரிவாக சொன்னால் படம் பார்க்கும் ஆவல் போய்விடும். மனநோயால் பாதிக்கப்பட்டவர்களை தனியே ஒரு தீவில் அடைத்து வைக்கப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கபடுகிறது. தீடிரென ஒரு நாள் அந்த பாதுகாப்பான தீவை விட்டு ஒரு பெண் மன நோயாளி தப்பி சென்று விடுகிறார். அந்த பெண்ணை கண்டுபிடிக்க டி காப்ரியோவும் அவருடன் ஒரு காவலரும் அந்த தீவுக்கு வருகிறார்கள். அந்த பெண்ணை கண்டுபிடித்தனரா ? இல்லையா?? என்பதை நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
படம் முழுக்க வியாபித்து இருப்பது டி காப்ரியோ தான். அந்த பெண்ணை கண்டுபிடிக்க இவர் கையாளும் முறைகளும், செருப்பே அணியாமல் அந்த பெண் எப்படி அந்த தீவில் தப்பி வாழ்கிறார் என்பதை கண்டுபிடிக்க இவர் எடுக்கும் முயற்சிகளும் அபாரம். அந்த தீவிற்கு ஒரே ஒரு படகுதான் வந்து செல்ல பயன்படுத்துகிற நிலையில் இவருக்கு கனவில் சிறு குழந்தைகள் வந்து துன்புறுத்த இது அங்கு பணி புரியும் மருத்துவர்கள் செய்யும் தில்லு முல்லு என அதை ஆராய்வதும் படம் முழுக்க இவர் ராஜ்யம்தான்.
பென் கிங்கை பற்றி சொல்லாமல் இந்த பதிவை முடிக்க மனமில்லை. அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர், டி காப்ரியோ கேட்கும் கேள்விகளுக்கு இவர் தரும் அசராத பதில்களும் சலனமில்லாத இவரின் முக பாவங்களும் அடடா ரகம்.
மொத்தத்தில் ஒரு நல்ல சைகோ த்ரில்லர் படம் இது அதிக வன்முறை காட்சிகள் இல்லாமல். படத்தில் ட்ரைலரை இத்துடன் இணைத்துள்ளேன் உங்களுக்காக.
.
மீண்டும் அடுத்த படத்தின் விமர்சனத்தோடு உங்களை சந்திக்கிறேன்

பாஸ் ... விமர்சனம் நல்லாயிருக்கு. இதுவரை பார்த்திராத புதிய படங்களை கொஞ்சம் அறிமுகப்படுத்துங்களேன்.
ReplyDeleteஅப்படியோ Word Verification இல்லாமல் பண்ணிவிடுங்கள்.
ReplyDelete