அன்றாடம் நாம் எத்தனையோ மனிதர்களை எதிர்கொள்கிறோம், சந்திக்கிறோம் ஆனாலும் எல்லோரிடத்திலும் நமக்கு ஒரு ஈர்ப்பு ஏற்படுவதில்லை. நம்மையும் அறியாமல் ஏதோ ஒன்றுதான் நம்மை அவர்கள் பால் இழுத்து செல்கிறது. காதல்வயப்படுவது இப்படித்தான் போலும். ரொம்ப பிலாசபி பேசியாச்சி நேரா மேட்டருக்கு வருவோம்.
தன் காதலின் முறிவை மறக்க நியூயோர்க்கில் இருந்து லாஸ்வேகாஸ் பயணமாகிறார் Joy Ellis McNally (Camaroon Diaz). பேர் ரொம்ப நீளமா இருக்கு நாம ஜோய்னு வச்சுக்குவோம். மறுபுறம் ஒழுங்கா வேலை செய்ய தெரியலைன்னு மகனையே வேலையை விட்டு துரத்தற அப்பாவையும் அந்த சோகத்தையும் மறக்க லாஸ்வேகாஸ் வர்ற Jack Fuller (Aston Kutcher). எதிர்பாராத சந்தர்ப்பத்துல சந்திக்கிற ரெண்டு பெரும் போதை அதிகமாகி ஒரு நைட்ல கல்யாணம் பண்ணிகறாங்க. மறுநாள் போதை தெளிஞ்சு விவாகரத்தை பற்றி பேசும் நேரம் ஜோய்க்கு சொந்தமான ஒரு நாணயத்தை போட்டு ஜாக் 3 மில்லியன் ஜாக்பாட் அடிக்கிறார். இப்போ பணம் யாருக்கு சொந்தம் அப்படின்னு கோர்ட் படி ஏறி நிக்கிறப்போ நாட்டமை (ஜட்ஜ்) என்ன சொல்றார்னா ஆறு மாசம் ஒண்ணா சேர்ந்து வாழ்ந்துட்டு வாங்க அப்புறம் பணம் தரேன் அதுவரைக்கும் கவேர்மெண்டே பணத்தை வசிருக்கும்னு சொல்லிடறார். அந்த ஆறு மாசமும் அதுக்கு அப்புறம் என்ன நடந்ததுன்னு வழக்கம் போல நீங்களே பார்த்துகிடுங்க !!
படம் முழுக்கவே காமெடி அங்கங்கே வந்து கிச்சு கிச்சு மூட்டுது. தனக்கு 3 மில்லியன் ஜாக்பாட் அடிச்ச சந்தோசத்தில் இருக்கும்போது கண்ணா நமக்கு கல்யாணம் ஆய்டுச்சி ஒழுங்கா பாதி துட்ட எண்ணி வைன்னு அம்மணி மேலே மோதிரத்தை காட்டுது பாருங்க. ஆறு மாசத்துக்குள்ஒருவரை ஒருவர் விரட்டி அடிக்க இவர்கள் போடும் திட்டங்கள்தான் படத்தின் திரைக்கதையையே நகர்த்தி செல்கிறது. கதை என்று ஒன்றும் பெரிதாக இல்லை திரைக்கதையை மொத்தமும் சிரிக்கும்படி அமைத்ததுதான் பலம்.
ரொமாண்டிக் காமெடி படங்களின் நிஜமான ஹீரோ என்றால் அது ஆஸ்டன் குட்சேர் (Auston Kutcher) தான். தனக்கு பிடிக்கா விட்டாலும் ஜாய் அழைத்ததை மறுக்க முடியாமல் அவளின் கம்பனி பார்ட்டிக்கு போய் அவளுடைய பாஸை இம்ப்ரெஸ் பண்ணுவது நல்ல காமெடி.
30 million பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் 2008-இல் வெளியாகி நல்ல வசூலை அள்ளியது (நன்றி -wikipedia). உலகப்பட வரிசையில் இதை சேர்த்து கொள்ளாவிட்டாலும் காமெடி படம் பார்க்கும் பிரியர்கள் தவறாமல் பார்க்கவேண்டிய படம் இது.



விமர்சனம் நன்று. பார்க்க முயற்சிக்கிறேன்.
ReplyDelete