காதலால் ஏற்படும் சந்தோசங்களை விட அது தரும் வேதனை அதிகம். காதலனோ/காதலியோ கிடைக்கும்போது ஏற்பாடு சந்தோசங்களை விட அவர்களின் பிரிவு தரும் கஷ்டம் அதை உணர்ந்தவர்களுக்கே புரியும். என்ன காதலை பத்தி ஓவரா பீலா விடுற மாதிரி இருக்கேன்னு கடுப்பாக வேணாம். இந்த படத்தின் கதை அப்படி.
கதையை சுருக்கமா சொல்லிடறேன், ரெண்டு பெண்கள் அவங்க காதலர்களால் பிரச்சினை, ஒருத்தர் அமெரிக்கால இருக்கார் (கமரூன் டியஸ்) இன்னொருத்தர் இங்கிலாந்தல இருக்கார் (கதே வின்ஸ்லெட்). இரண்டு பேரும் வீட்டை ரெண்டு வாரத்துக்கு மட்டும் மாத்திக்க முடிவு பண்ணி கெளம்பி போறாங்க. போற இடத்துல ரெண்டு பேருக்கும் புது காதலர்கள் கிடைக்க முடிவு சுபம்.
கதை ரெண்டு வரில சொல்லிட்டாலும் படம் நமக்குள்ள ஒருவித குதூகலத்தை கொண்டு வரும் அப்படிங்கறதுல சந்தேகமே இல்லை, நமக்கு புடிச்ச பொருளோ இல்லை வாலிப வயதில் வரும் காதலோ அந்த மாதிரி ஒரு உற்சாகம். ரெண்டு பெண் பாத்திரமும் வித்தியாசமா காட்டி இருக்கும் இயக்குனர் அவருக்கு பெரிய பாராட்டுதல்கள். இரண்டு பேரில் என்னை ரசிக்க வைத்தது கமரூன் மட்டுமே. வித்தியாசமான முக பாவங்களை மாற்றி கொள்வது ரொம்பவே அழகு.
கதேவுக்கு ரொம்ப பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், அந்த டைட்டானிக் அழகி அடிக்கடி மனதிற்குள் வந்து போவதால், படத்தோடு ஒட்டி ரசிக்க முடியவில்லை. ஆனாலும் அந்த பாத்திரத்திற்கு வேறு யாரையும் பொருத்தி பார்க்கவும் இயலாது. இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவிற்கு வந்து கமரூன் வீட்டில் நுழைந்தவுடன் இவர் அடையும் பரவசம் ரொம்ப சிறப்பு .
கமரூன் டைஸ் , இந்த படத்தில் வழக்கமான நகைச்சுவையை அங்கங்கே அள்ளி தெளித்திருக்கிறார். தன் காதலன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை அறிந்து அவனை வெளியில் தள்ளி விட்டு கோபப்படுவது ரசிக்கலாம். முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் இன்னும் ரசிக்கலாம்.
படத்தின் இயக்குனர் "நான்சி மேயர்", பெண் இயக்குனர் என்பதால் மெல்லிய பெண் உணர்வுகளை படம் பிடித்திருப்பது அழகு. இரண்டும் பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்திருந்தாலும் அதை வித்தியாச படுத்தி கட்சி அமைத்ததர்க்கே இயக்குனரை பாராட்டலாம். ஆனாலும் விக்ரமன் பட பாணியில் சில காட்சிகள் (ஒரு பாட்டில் பணக்காரன் ஆகும் கதாநாயகன்) இருந்தாலும் மனம் விட்டு ரசிக்கலாம். மொத்தத்தில் நல்ல பொழுதுபோக்கு படம். என்னை மாதிரி ரொமாண்டிக் காமெடி படத்தை ரசிப்பர்வர்களுக்கு இது ஒரு நல்ல படம்.
படத்தின் முன்னோட்ட காணொளியை இணைத்துள்ளேன் !!!

ஏன் ரொம்ப நாளா காணோம்?.. விமர்சனம் வழக்கம் போல அருமை! நோட் பண்ணி வைச்சுக்கிறேன்!
ReplyDeleteபணிசுமை கொஞ்சம் அதனால எழுத நேரம் இல்லை. இனி தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன் நண்பா!!!
ReplyDelete